விக்கிரமசிங்கபுரம்: விக்கிரமசிங்கபுரம் நகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களிடம் கடன் வாங்கி தருவதாக கூறி 90 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நாகர்கோவில் தொண்டு நிறுவன இயக்குநர் மற்றும் இவரது கணவரை போலீசார்கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் தெருவில் ஒரு தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனராக கொலுசம்மாள் செயல்பட்டு வருகிறார். இவரது கணவர் சிவா, தொண்டு நிறுவனத்தின் செயலாளராக இருந்து வருகிறார்.கடந்த சுமார் 3 மாதங்களுக்கு முன் விக்கிரமசிங்கபுரம் வந்த கொலுசம்மாள் விக்கிரமசிங்கபுரம் பசுக்கிடைவிளை சுந்தரபுரம் தெருவை சேர்ந்த நேரு மனைவி மணிரோசிடம் தொண்டு நிறுவனத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழு அமைத்து, குழு உறுப்பினர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி தருகிறேன். இதில் 20 ஆயிரம் ரூபாய் மானியம். இத்துடன் அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகளை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய மணிரோஸ் அப்பகுதியில் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக செயல்பட்டு உறுப்பினர்களை சேர்க்க ஆரம்பித்துள்ளார். குழுவில் உறுப்பினராக சேர்வதற்கு உறுப்பினர் ஒருவர் 505 ரூபாய் சந்தா கட்ட வேண்டும் என்பதை தொடர்ந்து, மணிரோஸ் 180 பெண்களிடம் பணம் பிரித்து மொத்தம் 90 ஆயிரத்து 900 ரூபா யை தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் கொலுசம்மாவிடம் கொடுத்துள்ளார். வாங்கிய பணத்திற்கு ரசீது கொ டுக்காமல், கடனும் வாங்கி கொடுக்காததால் கொலுசம்மாள் மீது சந்தேகம் அø டந்த மணிரோஸ் மற்றும் சிலர் நாகர்கோவில் சென்று தொண்டு நிறுவனத்தில் பேசினர். அங்கு முறையான பதில் கிடைக்கவில்லை. இதனை தொ டர்ந்து மணிரோஸ் விக்கிரமிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரினை தொடர்ந்து கெ õலுசம்மாள் மற்றும் அவரது கணவர் சிவா ஆகிய இருவரையும் விக்கிரமசிங்கபுரம் போலீசார் அழைத்து வந்து, விசாரணை நடத்தினர். இதனிடையே கடன் கிடைக்கும் என்று நம்பி, பணம் கட்டிய சுமார் 150 பெண்கள் நே ற்று முன்தினம் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். போலீசாரா ல் கைது செய்யப்பட்ட கெ õலுசம்மாள் மற்றும் இவரது கணவர் சிவாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Recent Posts
Archives
Categories
Meta